"சார் உங்க பொண்ணு எங்கே?"
"இதோ கூப்பிடறேன்..."
"அம்மாடி அருந்ததி இங்கே வா டா... "
"அப்பா... பாருங்கப்பா இந்த அம்மாவை... காலையில் பத்து இட்லி சாப்பிட்டேனாம்... மறுபடியும் பசிக்குதுன்னு சொன்னா அம்மா சாப்பிட தர மாட்டேன்கிறாங்க...” என்று புகார் பத்திரம் வாசித்துக் கொண்டே வெளியே வந்தவள் புதிதாக அங்கே இருந்தவனின் கூர்ப்பார்வையில் வாய் அடைத்துப் போனாள்.
'இவன் என்ன இப்படி பார்க்கிறான்... நாலு பணியாரம் சாப்பிட்டா தப்பா' என்று எண்ணியபடி வாயில் திணித்துக் கொண்டு இருந்த பணியாரத்தையும், கையில் இருந்த இரண்டு டஜன் பணியாரத்தையும், அவனையும் மாறி மாறி பார்த்தாள்.
'திண்ணே சொத்தை அழிச்சுடுவா போல' என்று எண்ணியவனின் பார்வையில் எதைக் கண்டாளோ வேகமாக பணியாரத்தை மறைத்து வைத்தாள்.
'ஹ்ம்... இவன் பார்வையே சரி இல்லை... புடுங்கி தின்னுடுவான் போல' என்று எண்ணியவள் பணியாரம் இருந்த கிண்ணத்தை அவன் பார்வையில் படாதவாறு மறைத்து வைத்து சாப்பிடத் தொடங்கினாள்.
‘ஒத்த ரோசா... பொண்ணை ரொம்ப அருமையா பெத்து வச்சு இருக்கீங்க... சாப்பிட்டு சாப்பிட்டே நல்லா பீப்பா மாதிரி இருக்கா? இவளை என்னோட தலையில் கட்டப் பார்க்கறீங்களா? கடவுளே உனக்கு இரக்கமே இல்லையா’ என்று ஆன மட்டும் யோசித்தவனின் மூளையில் பளிச்சென ஒரு யோசனை தோன்றியது.
*******
“அம்மாடி அருந்ததி... என்னோட பையனை உனக்கு பிடிச்சு இருக்கு தானே?”
‘பிடிக்கலைன்னு சொல்ல தான் ஆசை... ஆனா என்ன செய்ய? என்னோட அப்பர் பீல் பண்ணுவாரே’ என்று எண்ணியவள் வெளியே ‘ஈஈஈ’ என எல்லா பற்களையும் காட்டி சிரித்து சமாளித்து வைத்தாள்.
“உங்க தாத்தா சொன்னதுக்காக நீ அவனை கல்யாணம் செஞ்சுக்க சம்மதிச்சு இருந்தாலும் என்னோட பையன் ரொம்ப நல்லவன் மா”
‘இவன் தானே... ஆமா.. ரொம்ப நல்ல நல்லவன்ன்ன்ன்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட அருந்ததியின் உதடுகள் ஏளனமாக வளைய அக்னியின் முகம் கடுகடுத்தது.
‘என்னைப் பத்தி கான்டக்ட் (Conduct) சர்டிபிகட் கேட்க.. இந்த அரவை மெஷின் தான் கிடைச்சாளா? அவளுக்கு சோற்றை தவிர வேறு எதைப்பத்தி தெரியும்?’ என்று எண்ணியவனின் உதடுகள் அவளைக் காட்டிலும் அதிகமாக வளைய... அருந்ததியோ அவனது நக்கலை எல்லாம் சூவென விரட்டித் தள்ளினாள்.
‘எப்பேர்ப்பட்ட சந்தர்ப்பம் கிடைச்சு இருக்கு... இனியொருமுறை இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமோ என்னவோ’ என்ற எண்ணத்துடன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு நேசமணியின் புறம் திரும்பினாள்.
“என்ன செய்றது அங்கிள்... அவர் மிலிட்டரியில் இருந்தவர்... பார்டரில் எதிர்களோடு சண்டை போட்டவர்.. எந்நேரமும் மெஷின் கன், பீரங்கியோட குடும்பம் நடத்தினவர்... அவரைப் போய் அமைதியான இடத்தில் இருக்க சொன்னா.. அவருக்கு அது கஷ்டம் இல்லையா?” என்று சொல்ல அக்னி பல்லைக் கடித்தான்.
‘என்னை சண்டைக்காரன்னு சொல்லுறா’
“ஏன்மா உன்னிடம் இவன் எதுவும் சண்டை போட்டானா?” நேசமணியின் பார்வை சந்தேகத்துடன் மகனை நோக்கி பாய... அக்னிக்கு உள்ளுர ஏற்பட்ட கோபத்தை வெளிப்படுத்தவும் முடியாமல், மறைக்கவும் முடியாமல் போராடினான்.
“ஆமா அங்கிள்... ரொம்பவும் ஸ்ட்ரிக்ட் ஆபிசரா நடந்துக்கிறார்...’ வராத கண்ணீரை துடைத்து விட... இப்பொழுது தந்தையின் பார்வையில் அதிருப்தி தெரிவதை உணர்ந்து கொண்ட அக்னிக்கு நிலைமையை எப்படி சமாளிப்பது என்றே புரியவில்லை.
“அது மட்டும் இல்லை அங்கிள்... நீமோவை வச்சு என்னை மிரட்டுறார்...”
அப்பாவின் பார்வையில் ‘அட கிராதகா’ என்னும் அழைப்பு இருக்க.. உடனடியாக அவளது பேச்சை நிறுத்தியாக வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தான் அக்னி.
***
“ஹலோ... லைனில் இருக்கீங்களா?”
“எதுக்காக எனக்கு போன் செஞ்ச??” அவன் குரலில் இருந்த அடக்கப்பட்ட ஆத்திரத்தை உணர்ந்து கொண்டாள்.
“வரும் வாரத்தில் இருந்து நம்ம ட்ரைனிங் ஆரம்பிக்கலாம்... இடம், நேரம் எல்லாம் உங்க விருப்பம்...”
.....
“ஹலோஓஓஓஓ”
“யூ மீன்...”
“ஐ கருவாடு...”
“ஏய்!....”
“அதே தான் நெருப்பு சார்... நம்ம கல்யாணம் நடக்கப் போகுது... அதுக்கு நீங்க சொன்ன கண்டிஷன் எனக்கு ஓகே... அடுத்த வாரத்தில் இருந்து நீங்க ஏற்கனவே சொன்ன மாதிரி ட்ரைனிங்கை ஆரம்பிக்கலாம்” என்று அவள் அமர்த்தலான குரலில் சொல்ல... அக்னிபுத்திரன் அதிர்ந்து போய் இருந்தான்.
“அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்.. ட்ரைனிங்க்கு வரும் பொழுது... கார்ப்பரேஷன் ஆள் மாதிரி நாயோட வராம... மிலிட்டரி மேன் மாதிரி தனியா வாங்க... வச்சிடட்டுமா நெருப்பு” என்றவள் அந்தப் பக்கம் அவன் கத்துவதை கேட்டதும் திருப்தியான மனதுடன் போனை வைத்து விட்டாள்.
‘நெருப்பு... இனி இருக்கு உனக்கு ஆப்பு’ என்று எண்ணத்துடன் அடுத்து செய்ய வேண்டிய வேலைகள் குறித்து சிந்திக்கத் தொடங்கினாள் அருந்ததி.
******
“உன்னைக் கொல்லப் போறேன் பாரு..”
“ஹை... ஹை... நீங்க வம்பு இழுக்கும் போது நான் இப்படியா கோபப்பட்டேன்”
“என்ன தான்டா வேணும் உனக்கு?”
“நான் ஒரு அழகான சிங்கிள் பையன்.. என்னோட கண்ணு முன்னாடி இப்படி லவ் பண்ணி குஜாலா இருந்தா எனக்கு காண்டாகுது.”
“அதுக்கு?”
“எனக்கும் ஒரு நல்ல பொண்ணா பார்த்து வைங்க... இல்லேன்னா அது வரைக்கும் இப்படி தான் பண்ணுவேன்.”
“என்னடா மிரட்டுறியா?”
“அப்படி பச்சையா சொல்ல முடியாது... ஆனா அப்படித் தான்”
“செய்யலைனா...”
“அடுத்த வாரம் ஹனிமூன் டிக்கட் புக் பண்ணி இருக்கீங்க தானே... அங்கேயும் வருவேன்..” கழுத்தை கட்டிக் கொண்டு அவன் கன்னத்தில் செல்லமாக ஒரு குத்து விட்டவனை முறைத்துப் பார்த்தான்.
“அட நாசமா போறவனே...”
“இன்னும் நிறைய லிஸ்ட்ல இருக்கு...”
“வேண்டாம்டா... உனக்கு அடுத்த வாரம் கல்யாணம்.. ரெடியா இரு...”
“ஐ!.. எங்கே பொண்ணு!.. எங்கே பொண்ணு!”
“ஏன்டா இப்படி அலையிற...”
“பாஸ் நான் எல்லாம் கல்யாணத்துக்குப் பிறகு பொண்டாட்டியை மட்டும் தான் காதலிக்கணும்ன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கிற நைன்ட்டிஸ் கிட்ஸ் வகையறா தெரியுமா?”
“எப்படியோ போ... கல்யாணத்துக்கு எல்லாம் ரெடி... உன்கிட்டே நாங்களே சஸ்பென்ஸ்சா இன்னிக்கு சொல்லலாம்னு இருந்தோம் . அதுக்குள்ளே நீயே குட்டையை குழப்பிட்ட... ஹனிமூன் டிக்கட் உனக்கும் உன்னோட பொண்டாட்டிக்கும் சேர்த்து தான் புக் பண்ணி இருக்கேன்”
“ஆஹா... நீ வாழ்க... நீ கொடை வாழ்க...”
“டேய்! பொண்ணைப் பத்தி எதுவுமே கேட்கல...”
“அட! பொண்ணு கிடைச்சா போதும் பாஸ்...”
“அட காய்ஞ்ச பயலே...”
************
“ஏய்! என்னாச்சு? ஏன் இப்படி ஓடி வர்ற? என்ன கோலம் இது?” என்று சிரித்துக் கொண்டே கேட்டவன் கையில் ஐஸ்கிரீம் டப்பாவோடு விரல்களை சப்பி சுவைத்தவாறே வெளியில் வந்த அக்னியைப் பார்த்ததும் அதிர்ச்சியில் வாயில் கை வைத்துக் கொண்டான்.
இருவரையும் மாறி மாறி பார்த்தான் கண்ணன். அருந்ததி வேகமாக அங்கிருந்து விலகி ஓடி விட கண்ணனோ அக்னியை இமைக்காமல் பார்த்து வைத்தான்.
“அவ்வா! இந்த பூனையும் பால் குடிக்குமாங்கிற மாதிரி இத்தனை நாளா சுத்திட்டு இருந்தீங்க. இப்போ தானே தெரியுது. இந்த பூனை கருவாட்டை பாத்திரத்தோட கவ்வும்னு” என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு பேச, அக்னியின் முகத்தில் அப்படி ஒரு ரசனை, பூரிப்பு.
“சட்டை கிழிஞ்சிருந்தா தைச்சு முடிஞ்சுடலாம்...
நெஞ்சு கிழிஞ்சுருக்கே எங்கே முறையிடலாம்”
என்று சோகமாக நெஞ்சில் குத்திக் கொண்டே பாடிய கண்ணனைப் பார்த்து எதுவுமே சொல்லாமல் அமைதியாக மீண்டும் அறைக்குள் போய் விட்டான் அக்னி.
‘அப்பாடி... அக்னி ப்ரோ அவளைத் தான் லவ் செய்றார் போல... நம்ம தப்பிச்சோம்’ என்று மகிழ்ச்சியுடன் அங்கிருந்து நகர முயல, அறைக்கு உள்ளிருந்து அக்னியின் குரல் கேட்டது.
“கண்ணா டார்லிங் ... உனக்கு பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் தான் பிடிக்குமாமே... வாங்கி வச்சு இருக்கேன். உள்ளே வா நம்ம இரண்டு பேர் மட்டும் தனியா சாப்பிடலாம்.” என்று அழைக்க கண்ணனின் நிலையை கேட்கவும் வேண்டுமா?
‘அட போங்கடா நான் காசிக்குப் போறேன்’ என்று வேகமாக வாசல் பக்கம் ஓடி விட்டான் அவன்.
******
‘இது என்னடா... எனக்கு வந்த சோதனை’ என்று சோர்ந்து போன முகத்துடன் பக்கத்தில் திரும்பி பார்க்க அங்கே ஒரு இளம்பெண் ஸ்டைலாக அமர்ந்து இருந்தாள்.
அவளைப் பார்த்ததும் இவனுக்கு ஏக குஷி. தன்னைத் திரும்பி அவள் பார்க்கும் நொடிக்காக காத்திருந்தவன் அவளைப் பார்த்து ‘ஈஈஈஈ’ என்று இளித்து வைத்தான்.
அந்தப் பெண் என்ன நினைத்தாளோ வேகமாக அங்கிருந்து நகர்ந்து போய் பக்கத்து சீட்டில் அமர்ந்து கொள்ள, அந்த சீட்டில் இருந்த பாட்டி ஒருவர் அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அவனைப் பார்த்து சிநேகமாக புன்னகைக்க, இவன் முகமோ விளக்கெண்ணெய் குடித்ததைப் போலானது.
“சை! எனக்குனு வந்து வாய்க்குதது பாரு... ஒன்னு ஆம்பிளை இல்லைன்னா கிழவியா? என்னடா கண்ணா உன் நிலைமை இப்படி ஆகிப் போச்சு. இப்படியே போனா உனக்கு லவ் லைப்னு ஒன்னு இருக்காது போலவே”என்று முணுமுணுத்தான்.
“அதான் நான் இருக்கேன்ல கண்ணா” என்று அக்னி அங்கிருந்தே கூற, கண்ணன் ஆந்தை முழி முழித்தான்.
‘இவ இந்தாளுக்கு வாக்கப்பட்டு சீரழியிறா... நான் வாக்கப்படாமலே சீரழியிறேன்’ என்று தனக்குள்ளாகவே புலம்பியவன் அதன் பிறகு சோகத்துடன் படத்தை பார்க்கத் தொடங்கி விட்டான்.
அக்னி சுற்றிலும் பார்வையிட்டுக் கொண்டே இருந்தான். எல்லாமே இயல்பாக இருந்தது. எதுவுமே தவறாக படவில்லை. அவ்வபொழுது கண்ணனையும் பார்த்தான். ஆரம்பத்தில் சந்நியாசம் போவது காசியா, ராமேஸ்வரமா என்பதைப் போல படத்தைப் பார்த்தவன், நேரம் கடக்க கடக்க படத்தில் தீவிரமாக மூழ்கி விட்டான்.
*****
புத்தகத்தை பெற விரும்புபவர்கள் ப்ரியா நிலையத்தை தொடர்பு கொள்ளவும். மொபைல் எண்: +91 94444 62284
MMK- சில துளிகள்
Madhumathi Bharath
0

கருத்துரையிடுக